மகனை கொன்று மூட்டைக்கட்டி வீசிய தந்தை: கோபிச்செட்டிப்பாளையத்தில் கொடூரம்
மகனை கொன்று மூட்டைக்கட்டி வீசிய தந்தை: கோபிச்செட்டிப்பாளையத்தில் கொடூரம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை சொந்த தந்தையே கொலை செய்து மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள நிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு பெரியசாமி என்ற மகன் இருந்தார். திருமணம் ஆகாத நிலையில் இவர் தந்தையுடனே வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தோட்டத்தில் விவசாயம் செய்ய கிணற்றில் தண்ணீர் போதிய அளவு இல்லாததால் காளியப்பனின் மகன் பெரியசாமி தண்ணீர் தேவைக்காக தோட்டத்தில் போர்வெல் அமைக்கலாம் என்று எண்ணி, அதற்காக ரூ ஒரு லட்சம் பணத்தை தனது தந்தை காளியப்பனிடம் கேட்டுள்ளார். ஆனால் காளியப்பன் மகனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி இரவு தந்தை மகன் இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாத்தில் மகன் பெரியசாமி தனது தந்தையை தாக்க முயற்சித்துள்ளார். அவரிடமிருந்து தப்பிப்பதற்காக காளியப்பன் தனது மகன் பெரியசாமியை கீழே தள்ளிவிட்டபோது அங்கிருத...
Comments
Post a Comment