மே மாதத்தில் சுடும் வெப்பம்... வெயிலை சமாளிக்க என்ன செய்யனும்? வழிகாட்டும் மத்திய அரசு
மே மாதத்தில் சுடும் வெப்பம்... வெயிலை சமாளிக்க என்ன செய்யனும்? வழிகாட்டும் மத்திய அரசு டெல்லி: நடப்பாண்டில் மே மாதத்தின்போது வெப்பநிலை இயல்பை காட்டிலும் கணிசமாக உயரும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் 46 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பு அளவை காட்டிலும் 6 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். வெப்பநிலை உயர்வால் ஏற்படும் பாதிப்பை தடுக்க மாநில அரசுகள் முன்னெச்ரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோடை வெயில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளித்துள்ளது. மே மாதத்தில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை இயல்பை காட்டிலும் கணிசமாக உயரும். நாட்டின் சில பகுதிகளில் 46 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பு அளவை காட்டிலும் 6 டிகிரி செல்சியஸ் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு வழிகாட்டு நெறிமுறை மத்திய சுகாதாரத் துறை செயலாளர்...