மே மாதத்தில் சுடும் வெப்பம்... வெயிலை சமாளிக்க என்ன செய்யனும்? வழிகாட்டும் மத்திய அரசு


மே மாதத்தில் சுடும் வெப்பம்... வெயிலை சமாளிக்க என்ன செய்யனும்? வழிகாட்டும் மத்திய அரசு


டெல்லி: நடப்பாண்டில் மே மாதத்தின்போது வெப்பநிலை இயல்பை காட்டிலும் கணிசமாக உயரும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் 46 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பு அளவை காட்டிலும் 6 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். வெப்பநிலை உயர்வால் ஏற்படும் பாதிப்பை தடுக்க மாநில அரசுகள் முன்னெச்ரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோடை வெயில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளித்துள்ளது.

மே மாதத்தில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை இயல்பை காட்டிலும் கணிசமாக உயரும். நாட்டின் சில பகுதிகளில் 46 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பு அளவை காட்டிலும் 6 டிகிரி செல்சியஸ் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு வழிகாட்டு நெறிமுறை

மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதி உள்ள அந்த கடிதத்தில், மே மாதத்தில் வெப்பநிலை இயல்பை காட்டிலும் கணிசமாக உயரும் என்றும், வெயிலின் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். வெப்பநிலை உயர்வால் சுகாதார பாதிப்புகள் ஏற்படலாம். என்பதால் இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

தயார் நிலை

மாநில அரசில் குறிப்பாக சுகாதாரத்துறை போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் மருத்துவர்கள், பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஐஸ் பேக்ஸ், ஓ.ஆர்.எஸ். பவுடர் போன்ற அடிப்படை மருந்துப் பொருட்கள் இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் அதிகளவு தண்ணீரை அருந்த வேண்டும். போதுமானவரை தங்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மின்சார தேவை

மின் தேவைகள் அதிகம் ஏற்படலாம். இதனால் மாநில அரசுகள் போதுமான அளவுக்கு சோலார் பேனல்களை இன்ஸ்டால் செய்து தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய வேண்டும். வானிலை நிலவரங்களை மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து, மக்கள் செய்ய வேண்டியது, தவிர்ப்பது குறித்த விபரங்களை தெரியப்படுத்த வேண்டும்.

வெப்பத்தை வெல்லலாம்

அரசு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் நாம் இந்த வெப்பத்தை வெல்லலாம் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். தினமும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்பநிலை தொடர்பான தகவல்களை பதிவு செய்கிறது. அதற்கு ஏற்ப மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வானிலை அறிக்கை

இந்த நிலையில், இன்றும் நாளையும் தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 4 முதல் 6ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் இன்று அறிவித்துள்ளது.

 

அக்னி நட்சத்திரம்

நடப்பாண்டு வரும் 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திர காலம் ஆரம்பமாகிறது. பொதுவாக அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். கோடை மழை பெய்தால் மட்டுமே வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments

Popular posts from this blog