தீவிர புயலாக வலுப்பெறும் அசானி! இந்த மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை! ஜாக்கிரதையா இருங்கள் மக்களே
தீவிர புயலாக வலுப்பெறும் அசானி! இந்த மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை! ஜாக்கிரதையா இருங்கள் மக்களே கத்தரி வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளதால் மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. அந்தமான் கடல் பகுதியில் உருவான இந்த தாழ்வுப் பகுதி இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை "அசானி" புயலாக வலுப்பெற்றது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள இந்த புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் மே 10 மாலை வட ஆந்திரா- ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு- வட...