கிரீன் டீயை நீங்கள் குடிக்கும் முறை தவறு..! எப்படி தெரியுமா..?
கிரீன் டீயை நீங்கள் குடிக்கும் முறை தவறு..! எப்படி தெரியுமா..? பல விதமான தேநீர் வகைகளில் கிரீன் டீ எனப்படும் பச்சை தேயிலைக்கு முதன்மையான இடம் உள்ளது. பிராசஸ் செய்யப்படாத தேநீர் வகையில் ஃப்ளூவனாய்ட்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கிரீன் டீ எடை குறைப்பது முதல் இளமையை தக்க வைப்பது வரை பல விஷயங்களுக்கு உதவியாக இருக்கிறது. ஆனால் கிரீன் டீயின் நன்மைகளை முழுமையாகப் பெற கிரீன் டீயை எப்படி எல்லாம் குடிக்க கூடாது என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது, அதைப் பற்றி இங்கே பார்க்கலாம். சாப்பிட்ட பிறகு கிரீன் டீயை குடிக்கக் கூடாது : உணவு சாப்பிட்ட பிறகு கிரீன் டீயை குடிப்பது செரிமானத்தை எளிதாக்கி கொழுப்பை குறைக்க உதவும் என்று பலரும் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், சாப்பிட்ட பிறகு கிரீன் டீ குடிப்பதால் உணவில் இருக்கும் புரதம் செரிமானம் ஆகாது. எனவே அதை தவிர்த்து விடவேண்டும். கிரீன் டீயை சூடாக குடிக்கக் கூடாது : புத்துணர்ச்சி ஊட்டும் தேநீரை பலரும் சுடச்சுட குடிக்க விரும்புவார்கள். ஆனால் கிரீன் டீயை பொறுத்தவரை மிதமான சூட்டில் தான் குடிக்க வேண்டும். சூடாக குடிப்பது...



Comments
Post a Comment