ஸ்வநிதி திட்டம் - 2024வரை தொடர மத்திய அரசு ஒப்புதல்
சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி செய்யும் பிரதமர் தெரு வியாபாரிகள் ஆத்மநிர்பார் நிதி திட்டம் (PM Street Vendor’s AtmaNirbhar Nidhi) எனப்படும் பிரதமர் ஸ்வநிதி திட்டம் (PM Svanidhi) செயல்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் ரூ.10,000 வரை கடன் பெறலாம். இது தவிர, முந்தைய கடனைத் திருப்பிச் செலுத்தியவர்களுக்கு இரண்டாவது முறை ரூ.20,000 கிடைக்கும். அந்த கடனையும் திருப்பி செலுத்திவிட்டால் மூன்றாம் முறையாக ரூ.50,000 கடனுதவி பெறலாம்.
இந்த திட்டமானது, கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய பிறகு அதன் தாக்கத்தில் இருந்து சிறு வியாபாரிகளையும், தெருவோர கடை வைத்திருப்பவர்களையும் பாதுகாக்க தொடங்கப்பட்டது.
Comments
Post a Comment