சிறிய சேவை பெரிய நன்மை: ரம்ஜான் சிந்தனைகள்-21| Dinamalar
குடித்து விட்டு மனைவியை அடிப்பது, கடன் பெற்றவரிடம் அநியாய வட்டி கேட்பது என பல பாவங்களை மனிதன் செய்கிறான். ஆனால் துன்பத்திற்கு ஆளாகும் போது, ‘செய்த பாவத்தின் விளைவால் இந்த கதிக்கு ஆளாகி விட்டேனே’ என மனம் நோகிறான். இதனால் என்ன பயன்? ‘இனி பாவம் செய்ய மாட்டேன்’ என திருந்துவதே துன்பம் போக்கும் வழி.
பிறரது துன்பம் போக்க பணம் கொடுத்து தான் உதவ வேண்டும் என்பதில்லை. “வழிப்போக்கர்களுக்கு இடையூறாக பாதையில் முள் மரம் கிடந்தது. அதை அப்புறப்படுத்தியவரின் பாவங்களை மன்னித்தான் இறைவன்” என்கிறது குர்ஆன். அவனுக்கு முன்பாக பலரும் பாதையில் சென்றார்கள். ஆனால் அவர்கள் ஒதுங்கினார்களே தவிர அப்புறப்படுத்தவில்லை.
‘யார் இப்படி செய்தது?’ என சிலர் திட்டவும் செய்தனர். ஆனால் முள்ளை அப்புறப்படுத்தியவர், பாதையில் வருவோரின்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment