முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!


இந்தியாவில் நம்பர் ஒன் முதல்-அமைச்சர் என்ற பெயருடன் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் என்று உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பேசியதாவது:-

சேப்பாக்கத்தின் செல்லப் பிள்ளையாக மட்டுமில்லாமல், தமிழ்நாட்டின் செல்ல பிள்ளையாக இருந்து திட்டங்களை நிறைவேற்ற விரும்புகிறேன்.

இந்தியாவில் நம்பர் ஒன் முதல்-அமைச்சர் என்ற பெயருடன் திராவிட மாடல் ஆட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி வருகிறார். இலவச பேருந்து பயணத்தை அறிமுகப்படுத்தியது திமுக ஆட்சிதான். யாரும் இலவச மகளிர் பேருந்து என்று அழைப்பதில்லை; ஸ்டாலின் பேருந்து என்றே அழைக்கிறார்கள்.

40%க்கு மேல் உடல் திறன் சவால்  உடைய மாற்றுத் திறனாளிகளுக்கு பள்ளி, கல்லூரிகளில் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு முழு நேர ஆணையம் அமைக்க வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர்,  துணைத் தலைவருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த முறை பேசும்போது வெளிநடப்பு செய்து விட்டீர்கள், இப்போது பேசுகையில் அவையில் இருப்பதற்கு நன்றி என்று பேசினார்.

அதனை தொடர்ந்து பேசுகையில், நானும் சில தினங்களுக்கு முன்பு ஓ.பி.எஸ் காரில் ஏறி செல்ல இருந்தேன். எனது காரில் ஏறி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கமலாலயம் சென்றுவிட வேண்டாம் என்று பேசினார். இதனால் சட்டசபையில் சிறிது நேரம் கலகலப்பு ஏற்பட்டது.

Comments

Popular posts from this blog