BOI வங்கியில் வேலைவாய்ப்பு: 696 காலிப்பணியிடங்கள் - முழு விவரம்
BOI வங்கியில் வேலைவாய்ப்பு: 696 காலிப்பணியிடங்கள் - முழு விவரம்
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் ஏப்ரல் 26, 2022 முதல் bankofindia.co.in என்ற வங்கியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் உள்ள Career செக்ஷன் மூலம் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பாங்க் ஆஃப் இந்தியாவின் தற்போதைய இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் மொத்தம் சுமார் 696 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 102 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் வரும் மே 10, 2022 வரை விண்ணப்பிக்கலாம்.
பாங்க் ஆஃப் இந்தியாவின் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அகமதாபாத், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், டெல்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கொல்கத்தா, லக்னோ, மும்பை, பனாஜி, பாட்னா, ராய்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படும் ஆன்லைன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
BOI ஆஃபிசர் பணியடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி - ஏப்ரல் 26 , 2022
BOI ஆஃபிசர் பணியடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி - 10 மே 2022
BOI ஆஃபிசர் தேர்வு தேதி - விரைவில் அறிவிக்கப்படும்
also read : குரூப் 4 தேர்வுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பம்
காலிப்பணியிட விவரங்கள்..
மொத்த காலியிடங்கள் - 696.. இதில் ரெகுலர் பதவிகள் 594, ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள் 102
வழக்கமான பதவிகளுக்கான கலிப்பணியிடங்களின் விவரம்:
எகனாமிஸ்ட்: 2 போஸ்ட்கள்
ஸ்டாட்டிஸ்டிஷன்: 2 போஸ்ட்கள்
ரிஸ்க் மேனேஜர்: 2 போஸ்ட்கள்
கிரெடிட் அனலைஸ்ட்: 53 போஸ்ட்கள்
கிரெடிட் ஆஃபிசர்: 484 போஸ்ட்கள்
டெக் அப்ரைஸல்: 9 போஸ்ட்கள்
IT ஆஃபிசர் - டேட்டா சென்டர்: 42 போஸ்ட்கள்
ஒப்பந்த அடிப்படையிலான பதவிகளுக்கான கலிப்பாணியிடங்களின் விவரம்:
மேனேஜர் ஐடி: 21 போஸ்ட்கள்
சீனியர் மேனேஜர் ஐடி: 23 போஸ்ட்கள்
மேனேஜர் ஐடி (டேட்டா சென்டர்): 06 போஸ்ட்கள்
சீனியர் மேனேஜர் ஐடி (டேட்டா சென்டர்): 6 போஸ்ட்கள்
சீனியர் மேனேஜர் (நெட்வொர்க் செக்யூரிட்டி): 05 போஸ்ட்கள்
சீனியர் மேனேஜர் (நெட்வொர்க் ரவுட்டிங் & ஸ்விட்சிங் நிபுணர்கள்): 10 போஸ்ட்கள்
மேனேஜர் (எண்ட் பாயிண்ட் செக்யூரிட்டி): 3 போஸ்ட்கள்
மேனேஜர் (டேட்டா சென்டர்) - சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் சோலாரிஸ்/யூனிக்ஸ்: 6 போஸ்ட்கள்
மேனேஜர் (டேட்டா சென்டர்) - சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் விண்டோஸ்: 3 போஸ்ட்கள்
மேனேஜர் (டேட்டா சென்டர்) - கிளவுட் விரிச்சுவலிசேஷன்: 3 போஸ்ட்கள்
மேனேஜர் (டேட்டா சென்டர்) ஸ்டோரேஜ் & பேக்கப் டெக்னலாஜிஸ்: 3 போஸ்ட்கள்
மேனேஜர் (டேட்டா சென்டர் - SDN-Cisco ACI-ல் நெட்ஒர்க் விரிச்சுவலிசேஷன்): 4 போஸ்ட்கள்
மேனேஜர் (டேட்டாபேஸ் எக்ஸ்பர்ட்): 5 போஸ்ட்கள்
மேனேஜர் (டெக்னாலஜி ஆர்கிடெக்ட்): 2 போஸ்ட்கள்
மேனேஜர் (அப்ளிகேஷன் ஆர்கிடெக்ட்): 2 போஸ்ட்கள்
also read : ரயில்வே துறையில் 147 காலிப்பணியிடங்கள்... ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
கல்வி தகுதி:
மேற்காணும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி பட்டதாரி முதல் முதுகலைப் பட்டம் வரை இருக்க வேண்டும். இது அனைத்து பதவிகளுக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களும் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டியது கட்டாயம். நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கலாம். இந்த கட்டணம் அனைத்து பிரிவினருக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
SC/ST/PWD: ரூ. 175 (இன்டிமேஷன் கட்டணங்கள் மட்டும்)
GEN/OBC: ரூ.850 (அப்ளிகேஷன் கட்டணங்கள் + இன்டிமேஷன் கட்டணங்கள்)
எவ்வாறு விண்ணப்பிப்பது?
BOI-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று ஹோம் பேஜில் உள்ள Apply ஆப்ஷனை தேர்வு செய்யவும். பின் புதிய பேஜில் அப்ளிகேஷன் ஃபார்ம் ஓபன் ஆகும். ஃபார்மில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுவதுமாக நிரப்பவும். விண்ணப்ப கட்டணத்தைச் செலுத்தவும்.பிறகு submit-ஐ கிளிக் செய்யவும். இறுதியாக அப்ளிகேஷன் ஃபார்மை சேவ் மற்றும் டவுன்லோட் செய்து கொள்ளவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment