மாங்கல்யத்தில் பழுது ஏற்பட்டால் என்ன செய்யணும்? மஞ்சள் கயிறு அணிந்து இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன?


மாங்கல்யத்தில் பழுது ஏற்பட்டால் என்ன செய்யணும்? மஞ்சள் கயிறு அணிந்து இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன?


பெண்கள் அணிந்துள்ள மங்கல கயிறாக இருக்கும் இந்த மஞ்சள் கயிறு எப்போதும் சேதமில்லாமல், அழுக்குகள் இல்லாமல், கருப்பாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மஞ்சள் கயிற்றில் தினமும் மஞ்சள் தடவ சொல்வதும் இதனால் தான். மங்களத்தின் அடையாளமாக இருக்கும் இந்த மஞ்சள் கயிற்றை எந்த அளவிற்கு பராமரித்து வருகிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுடைய குடும்ப வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். மஞ்சள் கயிறு அணிந்து இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்ன? மாங்கல்யத்தில் பழுது ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற சாஸ்திர தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

mangalyam1

கழுத்தில் மஞ்சள் கயிறு அணிந்து கொண்டு இருந்தால் அதில் அழுக்குகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய பொறுப்பு. அழுக்குகள் நிறைந்துள்ள மஞ்சள் கயிற்றை அணிந்திருக்கும் பெண்களிடம் செல்வம் நிலைப்பதில்லை. அழுக்காக இருக்கும் கயிற்றை அடிக்கடி நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். தினமும் மஞ்சள் தடவி வந்தால் அதன் நிறம் மங்காமல் பாதுகாக்கப்படும். மேலும் மஞ்சள் கயிறு சேதம் அடைவதற்கு முன்பே அதை மாற்றி விட வேண்டும். எனவே நீண்ட நாட்களுக்கு ஒரே கயிற்றை பயன்படுத்த வேண்டாம்.

மாங்கல்யத்தில் பழுது ஏற்படாமல் இருக்க வேண்டும். அப்படி உங்கள் மாங்கல்யத்தில் விரிசல் அல்லது பழுது ஏற்பட்டால் நீங்களாகவே சென்று அதை புதிதாக மாற்றிக் கொள்ள வேண்டாம். உங்களுடைய குல வழக்கப்படி உங்கள் வீட்டு பெரியவர்களிடம் கலந்தாலோசித்து என்ன செய்வது? என்று முடிவு எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் வீட்டில் இருக்கும் மூத்த சுமங்கலிப் பெண்களை கடைக்கு கூட்டி சென்று புதிய மாங்கல்யத்தை அவர்களுடைய கைகளால் வாங்க வேண்டும். மாங்கல்ய பழுது உள்ள பெண்கள் தனியாக சென்று புதிய மாங்கல்யத்தை வாங்கக் கூடாது.

mangalyam1

தாலிக்கயிற்றை மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்லது இது போல புதிய மாங்கல்யத்தை மாற்றிக் கொள்பவர்கள் அதை முறையாக மாற்றிக் கொள்வது நல்லது. எப்பொழுதும் தாலிக்கயிறு மாற்றும் பொழுது கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்ற வேண்டும். நின்று கொண்டோ அல்லது வேறு திசையில் நின்றோ தாலிக் கயிற்றை மாற்றக் கூடாது. இதனால் கணவனுக்கோ அல்லது அப்பெண்ணுக்கு தீர்க்காயுள் என்பது குறையும்.

- Advertisement -

திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் கிழமையில் மாங்கல்யத்தை மாற்றுவது மிகவும் நல்லது. சூரிய உதயத்துக்கு பின்பு, சூரியன் மறைவதற்கு முன்பு தாலிக்கயிறை மாற்றி விட வேண்டும். சூரியன் மறைந்த பிறகு மாலை நேரத்தில் மாற்றக்கூடாது அது போல ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் கண்டிப்பாக தாலி கயிறு மற்றும் மாங்கல்யத்தை மாற்றக்கூடாது. புதிய மாங்கல்யத்தை அணிபவர்கள் காலையில் வெறும் வயிற்றில் கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு நடைபாதையில் அமராமல் ஓரமாக ஓரிடத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து மூத்த சுமங்கலிப் பெண்களின் கைகளால் உங்களுடைய மாங்கல்யத்தை மாற்றி கொள்ள வேண்டும்.

mangalyam

மாங்கல்யத்தை அவர்கள் கோர்த்து கொடுக்க உங்களுடைய கணவன் அதை போட்டு விடலாம். ஒருபோதும் நீங்களாகவே புதிய மாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ளக் கூடாது. மாங்கல்ய சரடு அல்லது மஞ்சள் கயிற்றில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை தொங்க விடக்கூடாது. சிலர் ஊக்கு, சாவி போன்ற பொருட்களை மாட்டி வைப்பது உண்டு. இது மிகவும் தவறான செயலாகும். இதை ஒருபோதும் செய்யாதீர்கள். வெள்ளிக்கிழமையில் தினமும் மாங்கல்யத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து பழகுங்கள். இவ்வாறு தாலியை பராமரித்தால் அப்பெண்ணும், அப்பெண்ணின் கணவனின் ஆயுளும் தீர்க ஆயுள் பெறும் என்பது ஐதீகம்.

Comments

Popular posts from this blog