Commotion at Thiyagaraja Temple; -1835249568


தியாகராஜர் கோயிலில் பரபரப்பு; கமலாலய குளத்தில் பகீர் சம்பவம்!


திருவாரூர் மாவட்டம் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் அமைந்துள்ள கமலாலய குளத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் தெப்ப திருவிழா நடைபெற இருந்தது.

அதன்படி நேற்று மற்றும் நேற்றைய முதல் நாள் இரண்டு நாட்களும் தெப்பத் திருவிழா நடைபெற்றது. நேற்று நடைபெற்ற தெப்பத் திருவிழாவிற்கு தெற்கு கரையில் தென்மேற்கு பகுதியில் குளத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் ஒரு அலங்கார தூண் 15 அடி உயரம் சரிந்து விழுந்தது.

அப்போது நல்வாப்பாக அலங்கார தூண் தெப்பத்தின் மீது விழவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கமலாலய குளத்தில் நடந்த விபத்து பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் பக்தர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இன்று ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பலூன் விற்க வந்த சிறுமி முஸ்கான் மற்றும் ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் ஆகிய 2 பேரும் குளத்தில் குளித்து கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென 2 பேரும் தண்ணீரில் மூழ்கி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அலறி கூச்சலிட்டனர். உடனே தீயணைப்பு வீரர்கள் 50க்கும் மேற்பட்டோர் விரைந்து வந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு சிறுமி முஸ்கான் உடலை மட்டும் தீயணைப்பு துறையினர் மீட்டனர். மூழ்கிய வெங்கடேசனின் கதி என்ன ஆனது? என்று தெரியாததால் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பெரும் பரபரப்பும் சோகமும் நிலவி வருகிறது.

Comments

Popular posts from this blog