கமல்ஹாசனுடன் முதல்முறையாக இணையும் மன்சூர் அலிகான்!1656988545
கமல்ஹாசனுடன் முதல்முறையாக இணையும் மன்சூர் அலிகான்!
தமிழ் திரையுலகின் முன்னணி வில்லனாக வலம் வந்தவர் மன்சூர் அலிகான்.
இவரின் நீண்ட நாள் ஆசையான கமலுடன் நடிப்பது விரைவில் நடக்கவிருக்கிறது.
தமிழ் சினிமாவின் 1990 காலகட்டத்தில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை மிரட்டியவர் மன்சூர் அலிகான். மிரட்டும் முகபாவனை, அசாத்தியமான வசன உச்சரிப்பு என சினிமாவில் டிமாண்டான வில்லனாக வலம் வந்தார். மிகப்பெரிய கதாநாயகர்களுடன் சினிமாவில் மல்லுக்கட்டிய மன்சூர் அலிகானுக்கு, கமல்ஹாசனுடன் ஒரு படத்தில் கூட நடிக்காதது மிகப்பெரிய வருத்தமாக இருந்திருக்கிறது. இதை பல மேடைகளிலும் மன்சூர் அலிகான் சொல்லி இருக்கிறார்.
அதேபோல, ‘மன்சூர் அலிகானை ஒரு படத்திலாவது பயங்கரமான வில்லனாக நடிக்க வைத்து விடுவேன்’ என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதி எடுத்துள்ளார். ‘விக்ரம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் அடுத்த பாகத்தையும் எடுக்க லோகேஷ் ஆர்வமாக இருக்கிறார்.
எனவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல் ‘விக்ரம்’ படத்தின் அடுத்த பாகத்தில் கமல்ஹாசனுடன் மல்லுக்கட்டும் வில்லனாக மன்சூர் அலிகானை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் மன்சூர் அலிகானின் நீண்ட நாள் ஆசை விரைவில் நிறைவேறப்போகிறது.
Comments
Post a Comment