ட்விட்டரின் எதிர்காலம் உறுதியற்றது..ஊழியர்களிடம் மனம் திறந்த பராக் அகர்வால் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை முதலில் வாங்கிய உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், பின்னர் அனைத்து பங்குகளையும் வாங்க முன்வந்தார். ஒரு பங்கு 54.2 அமெரிக்க டாலர் என ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையில் 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி ஆகும். ட்விட்டர் நிறுவனம் கைமாறவுள்ள நிலையில் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வால் , ஊழியர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், நிர்வாகம் முழுமையாகக் கைமாற 6 மாதங்கள் வரை ஆகலாம் எனவும், ’இப்போது’ வரை யாரும் வேலை நீக்கம் செய்யப்படுவதற்கான சூழல் ஏற்படவில்லை எனவும் கூறினார். நிறுவனம் முழுமையாகக் கைமாறிய பின் அது எந்த திசையில் செல்லும் என்பது தெரியாது எனக் குறிப்பிட்ட பராக் அகர்வால், ட்விட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது எனவும் தெரிவித்தார். மேலும் படிக்க | எலோன் மஸ்க் வசம் செல்லும் ட்விட்டர்; மஸ்க் பதிவு செய்த முதல் ட்வீட் விரைவில் எலான் மஸ்க் ட்விட்டர் ஊழி...
Comments
Post a Comment