Posts

மும்பைக்கு எதிராக கடைசி ஓவரில் சென்னை திரில் வெற்றி; சாதனை மேல் சாதனை குவிக்கும் தல தோனி

Image
மும்பை: நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில்  கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட முதல் பந்தில் பிரிட்டோரியஸ் உனட்கட் பந்துவீச்சில் எல்பிடபில்யூ ஆனார். இரண்டாவது பந்தில் பிராவோ ஒரு ரன் எடுக்க 3-வது பந்தை எதிர்கொண்ட டோனி சிக்சர் அடித்தார். 4-வது பந்தில் பவுண்டரியை விரட்டினார் தோனி. 5-வது பந்தில் தோனி 2 ரன்கள் எடுக்க இறுதி பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தில் பவுண்டரி விரட்டிய தோனி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதன் மூலம் சென்னை அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. இதன் மூலம் ஐபிஎல் 2016 இல் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடும் போது ஐபிஎல்... விரிவாக படிக்க >>

குழந்தைகளுக்கு இதய அபாயத்தை ஏற்படுத்தும் புதிய ஒமிக்ரான் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Image
உலகளவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகிறது. சீனாவில் மட்டுமின்றி இந்தியாவின் சில பகுதிகளிலும் தொற்று பாதிப்புகள் உயர்ந்து வருகின்றன . தற்போதைய கொரோனா பாதிப்பு அதிகரிப்பிற்கு ஒமைக்ரான் வேரியன்ட் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட் குழந்தைகளை அதிகம் பாதித்து வருகிறது. இந்நிலையில் Omicron வேரியன்ட் குழந்தைகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் மேல் சுவாச நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது கடுமையானதாக இருந்தால் குழந்தைகளுக்கு இதயம் சார்ந்த பிரச்னைகளை கூட ஏற்படுத்தும் என்ற சமீபத்திய ஆய்வு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளுக்கு இருக்க கூடிய சிறிய மற்றும் ஒப்பீட்டளவில் மடியகூடிய காற்றுப்பாதைகள் காரணமாக,... விரிவாக படிக்க >>

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!

Image
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் புகழாரம்! இந்தியாவில் நம்பர் ஒன் முதல்-அமைச்சர் என்ற பெயருடன் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் என்று உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். சென்னை, தமிழக சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பேசியதாவது:- சேப்பாக்கத்தின் செல்லப் பிள்ளையாக மட்டுமில்லாமல், தமிழ்நாட்டின் செல்ல பிள்ளையாக இருந்து திட்டங்களை நிறைவேற்ற விரும்புகிறேன். இந்தியாவில் நம்பர் ஒன் முதல்-அமைச்சர் என்ற பெயருடன் திராவிட மாடல் ஆட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி வருகிறார். இலவச பேருந்து பயணத்தை அறிமுகப்படுத்தியது திமுக ஆட்சிதான். யாரும் இலவச மகளிர் பேருந்து என்று அழைப்பதில்லை; ஸ்டாலின் பேருந்து என்றே அழைக்கிறார்கள். 40%க்கு மேல் உடல் திறன் சவால்  உடைய மாற்றுத் திறனாளிகளுக்கு பள்ளி, கல்லூரிகளில் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு முழு நேர ஆணையம் அமைக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்,  துணைத் தலைவருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த முறை பேசும்போது வெளிநடப்பு செய்து

இதுல யார் ஜெயிச்சா என்ன? தோற்றால் என்ன?- மும்பை -சிஎஸ்கே போட்டி குறித்து ரசிகர்கள் மனநிலை

Image
முன்பெல்லாம் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி என்றால் முதல் நாள் முதலே ரோஹித் சர்மாவா, தோனியா, பார்த்து விடுவோம், ராயுடுவுக்கு பதில் சொல், இஷான் கிஷனுக்கு பதில் சொல், பொலார்டுக்குப் போட முடியுமா? என்றெல்லாம் டீக்கடைகள் முதல் மக்கள் கூடும் இடங்களில் விவாதம் அரங்கேறும், ஆனால் இந்த முறை சிஎஸ்கே-மும்பை போட்டி என்றால் ஐயைய வேற நல்ல மேட்ச் இல்லையா என்பது போல்தான் ரசிகர்களின் மனோபாவம் உள்ளது. ஒருபுறம் கிரிக்கெட்டே திகட்டத் திகட்ட ஓவர் டோஸ் ஆகிவிட்டது என்றாலும் இந்த சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் புளித்துப் போன அணிகளாகி விட்டது ரசிகர்களுக்கு இந்த ஐபிஎல் தொடரில் இந்த மனோபாவத்தை இரு அணிகளும் மாற்றுவத் கடினம். இந்த சீசனில் இதுவரை இரு அணிகளும் தங்களது நற்பெயரை நிலைநாட்ட தவறி... விரிவாக படிக்க >>

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: “லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்பை தடை செய்யலாம்...” - உயர்நீதிமன்றம் கருத்து

Image
ஒரு மணி நேரத்துக்கு முன்னர் விரிவாக படிக்க >>

கோஹ்லிக்கு ஓய்வு தேவை... ரவி சாஸ்திரி வலியுறுத்தல்

Image
மும்பை: ‘நிறைய விளையாடி விட்ட கோஹ்லி இன்னும் ஆறேழு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டும்  என்றால், இடையில்  கட்டாயம் சிறிது ஓய்வு எடுக்க வேண்டும்’ என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினுக்குப் பிறகு சாதனை நாயகனாக விஸ்வரூபம் எடுத்த விராத் கோஹ்லி (33), தொடர்ந்து சிறப்பாகவே விளையாடி வந்தாலும், சமீபத்திய ஆட்டங்களில் துரதிர்ஷ்டவசமாக பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். அவர் சதம் அடித்தே 2 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. கேப்டன் பொறுப்பை துறந்துவிட்ட பிறகாவது பதவி அழுத்தம், நெருக்கடி இல்லாமல் அதிரடியாக விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில்  அப்படி எதுவும் நிகழவில்லை. இதுவரை 7 லீக் ஆட்டங்களில் விளையாடி 2ல் மட்டுமே 40... விரிவாக படிக்க >>

உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி காலாவதி ஆயுதங்களை சப்ளை செய்யும் ‘நேட்டோ’ - ஐ.நா-வுக்கான ரஷ்யப் பிரதிநிதி பகீர் தகவல்

Image
கீவ்: உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி காலாவதி ஆயுதங்களை நேட்டோ நாடுகள் சப்ளை செய்து வருவதாக ஐ.நா-வுக்கான ரஷ்யப் பிரதிநிதி பகீர் தகவல் வெளியிட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் போர் தொடுத்து 55 நாட்கள் நிறைவடைந்த நிலையில், கிழக்கு உக்ரைன் முழுவதும் வான்வழித் தாக்குதல்களை நடத்திய பின்னர், கீவ் நகரில் மீண்டும் தாக்குதலை நடத்த ரஷ்யப் படைகள் திட்டமிட்டுள்ளன. அடுத்த சில நாட்களில் மரியுபோல் ரஷ்யாவின் கட்டுக்குள் வந்துவிடும் என  ஐரோப்பிய அதிகாரி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து  பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் உக்ரைனுக்கு  பீரங்கிகளை வழங்க உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனில்  நடந்த போர்க்குற்றங்களுக்கு ரஷ்ய அதிபர் புடின் பொறுப்பேற்க வேண்டும்... விரிவாக படிக்க >>