BOI வங்கியில் வேலைவாய்ப்பு: 696 காலிப்பணியிடங்கள் - முழு விவரம் எகனாமிஸ்ட், கிரெடிட் அனலிஸ்ட் உள்ளிட்ட பல பணியிட பதவிகளுக்கு விண்ணப்பிக்க, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்பதாக பாங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் ஏப்ரல் 26, 2022 முதல் bankofindia.co.in என்ற வங்கியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் உள்ள Career செக்ஷன் மூலம் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பாங்க் ஆஃப் இந்தியாவின் தற்போதைய இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் மொத்தம் சுமார் 696 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 102 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் வரும் மே 10, 2022 வரை விண்ணப்பிக்கலாம். பாங்க் ஆஃப் இந்தியாவின் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அகமதாபாத், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், டெல்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கொல்கத்தா, லக்னோ, மும்பை, பனாஜி, பாட்னா, ராய்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படும் ...